• January 18, 2020
0 Comments

மும்பை :

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான முந்தைய பாரதீய ஜனதா கூட்டணி அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியாக பதவி வகித்த மறைந்த முன்னாள் மத்திய மந்திரி கோபிநாத் முண்டேயின் மகள் பங்ஜா முண்டே. இவர் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பார்லி தொகுதியில் போட்டியிட்டார். தனது ஒன்றுவிட்ட சகோதரர் தனஞ்செய் முண்டேயிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். தனது தோல்வி தொடர்பாக அவர் கட்சியின் மூத்த தலைவர்கள் மீது அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், பங்கஜா முண்டே திடீரென தனது முகநூல் பக்கத்தில் ‘எதிர்கால பயணம்’ என பதிவு ஒன்றை வெளியிட்டு, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப எதிர்காலத்தை முடிவு செய்வேன் என தெரிவித்து இருந்தார். அவர் புதிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கும் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து தனது கட்சியின் பெயரான ‘பாரதீய ஜனதா’ என்ற வார்த்தையை அதிரடியாக நீக்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *