• January 18, 2020
0 Comments

லக்னோ:

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அம்மாநில எதிர் கட்சி தலைவரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- உத்தர பிரதேசத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும் கற்பழிப்பு, கொலை போன்ற சம்பவஙகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது.

பள்ளி செல்லும் குழந்தைகள், அலுவலகம், பொது இடங்களுக்கு செல்லும் பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அந்த அளவுக்கு உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு ‘காட்டு ராஜாங்கம்’ இங்கு நடைபெற்று கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *