• January 18, 2020
0 Comments

வேதாரண்யத்தை அடுத்த மோட்டாண்டி தோப்பு பகுதியை சேர்ந்தவர் வேதராசன். இவர் அப்பகுதியில் உள்ள மணியன்தீவு கடல் மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனராக இருந்தார்.  வேதராசன் சிலரிடம் கடன் வாங்கி இருந்துள்ளார். கடன் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் நேற்று முன்தினம் இரவு வேதராசன், தனது மனைவியுடன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  நேற்று மாலை வரை கதவை திறக்காமல் இருந்ததால் பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது இருவரும் வி‌ஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்த வேதாரண்யம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *