• January 18, 2020
0 Comments

காபூல்:

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அல்குவைதா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து அல்கொய்தா, தலிபான் பயங்கரவாதிகளை அமெரிக்கா வேட்டையாடி வருகிறது. ஆப்கானிஸ்தானில் பதுங்கி உள்ள தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்க ராணுவபடைகள் அங்கு முகாமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இதை அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *