• January 18, 2020
0 Comments

கின்ஷாசா:

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. காங்கோவிற்கு அருகே அமைந்துள்ள உகாண்டா நாட்டில் செயல்பட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் குழுவினர் இருநாட்டிலும் பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், வடக்கு கிவு மாகாணத்திற்கு உள்பட்ட பேனி நகரில் கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராணுவத்தினர் கிளர்ச்சியாளர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *