• January 18, 2020
0 Comments

சிட்னி,

ஓராண்டு தடையில் இருந்து மீண்டு வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், முதலில் களமிறங்கிய ஆஷஸ் தொடரில் 10 இன்னிங்சில் 95 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த தொடரில் அவரின் சராசரி 9.5. இதனால் வார்னர்.கடும் விமர்சனத்தை எதிர்கொண்டார்.

இந்நிலையில் ஆஷஸ் தொடரில் சரியாக ஆடாத வார்னர், சொந்த மண்ணில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடுவார் என நாதன் லயன் தெரிவித்துள்ளார். வரும் 21ம் தேதி நடைபெறும் பாகிஸ்தான் தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆஷஸ் தொடரில் அவரது ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமம் கிடையாது. ஆனால்,  நாங்கள் ஆஷஸ் கோப்பையை தக்க வைத்த அணியில் அவர் ஒரு அங்கமாகவே இருந்தார். ‘‘டேவிட் வார்னர் உலகத்தரம் வாய்ந்த வீரர். ஃபார்ம் இன்றி தவிக்கும் அவர், அதில் இருந்து மீண்டு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.   நெருக்கடி உள்ளது என்பதை வார்னர் உணர்ந்திருப்பார். சவால்களை ஏற்றுக் கொண்டு அதில் இருந்து முன்னோக்கிச் சென்று சிறப்பாக விளையாட முயற்சி செய்ய வேண்டும்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *