• January 18, 2020
0 Comments

இந்தூர்,

நடப்பு 2019-ம் ஆண்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்க சராசரியாக 15.82 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளனர். இது இந்த ஆண்டில் வேகப்பந்து வீச்சாளர்களின் மிகச்சிறந்த சராசரியாகும். இந்த வெற்றி ரகசியம் குறித்து  இந்திய அணியின் வேகப்பந்து உமேஷ் யாதவ் முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் கலந்துரையாடிய உரையால் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த உரையாடலில் முகமது ஷமியிடம் இஷாந்த் ஷர்மா, ‘‘நீங்கள் வீசும் அதே இடத்தில்தான் நாங்களும் பந்தை பிட்ச் செய்து வீசுகிறோம். நாங்கள் வீசும்போது எதிரணி பேட்ஸ்மேனின் காலுறையில் பந்து பட்டால் ரீப்ளேயில் அது ஸ்டம்பை விட்டு விலகி செல்கிறது. அதுவே உங்களது பந்து வீச்சு என்றால் ஸ்டம்பை நோக்கி செல்கிறது. இது எப்படி’’ என்று கேட்டார்.

இதற்கு பதில் அளித்த முகமது ஷமி, ‘‘பிரியாணி சாப்பிடுவதால்தான் என்று மக்கள் சொல்வார்கள். அது அப்படி அல்ல. கடவுளின் கருணை மற்றும் அதிர்ஷ்டத்தால் சாதிக்கிறேன். என்னை பொறுத்தவரை கச்சிதமாக சரியான அளவில் (லைன் அன்ட் லென்ந்த்) பந்தை வீசுவதில் கவனம் செலுத்துகிறேன். அதில் வெற்றி கிடைக்கும்போது அதையே திரும்ப திரும்ப முயற்சிக்கிறேன்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *