• January 18, 2020
0 Comments

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஹில்டன் ஓட்டலில் ஹூஸ்டன் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ரேணு கத்தார், ஹூஸ்டன் பெருநகர பார்ட்டனர் ஷிப் மிஸ் சூசன் டேவன் போர்ட் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, ஹூஸ்டன் பல்கலைக்கழக வேந்தர் ரேணு கத்தார், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்தார். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், தமிழகம் திரும்பியதும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்து ஆலோசித்து தமிழ் இருக்கை அமைவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்தார். மேலும் தன் சொந்த பங்காக 10 ஆயிரம் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 லட்சம்) வழங்குவதாக கூறினார்.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *