• January 18, 2020
0 Comments

இந்தூர்

நடப்பு 2019-ம் ஆண்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்க சராசரியாக 15.82 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளனர். இது இந்த ஆண்டில் வேகப்பந்து வீச்சாளர்களின் மிகச்சிறந்த சராசரியாகும். இந்த வெற்றி ரகசியம் குறித்து  இந்திய அணியின் வேகப்பந்து உமேஷ் யாதவ் கூறுகையில், ‘‘மணிக்கு 140-145 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து பந்து வீச முடிகிறதே என்று கேட்கிறீர்கள். இது என் மரபணுவில் உள்ளது.

சிறு வயதில் எனது தந்தையிடம் இருந்து நிறைய கற்று இருக்கிறேன். அவர் என்னை அதிகமாக ஓட வைத்தார். அதுதான் இப்போது என்னை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது. தொடர்ந்து இதேபோல வேகமாக பந்து வீச முயற்சிக்கிறேன்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *