• January 18, 2020
0 Comments

இந்தூர்,

நடப்பு 2019-ம் ஆண்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்க சராசரியாக 15.82 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளனர். இது இந்த ஆண்டில் வேகப்பந்து வீச்சாளர்களின் மிகச்சிறந்த சராசரியாகும். இந்த வெற்றி ரகசியம் குறித்து  இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கூறுகையில், ‘‘களத்தில் சோர்ந்து போகும்போது, தமாஷ் செய்து உற்சாகமூட்டிக் கொள்கிறோம்.

இஷாந்த், உமேஷ் யாதவுடன் இணைந்து பந்து வீசும்போது எனது பணி எளிதாகி விடுகிறது. பந்தை துல்லியமாக வீசுவதில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். எப்போதும் புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி சுழற்பந்து வீச்சாளர்களின் சுமையை குறைக்க முயற்சிக்கிறோம்’’ என தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *