• January 18, 2020
0 Comments

இந்தூர்,

நடப்பு ஆண்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்க சராசரியாக 15.82 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளனர். இது 2019-ம் ஆண்டில் வேகப்பந்து வீச்சாளர்களின் மிகச்சிறந்த சராசரியாகும். இந்த வெற்றி ரகசியம் குறித்து  இஷாந்த் ஷர்மா கூறுகையில், ‘‘என்னை ஒரு மூத்த வீரராக பாவித்து நடந்து கொள்வதில்லை. எங்களுக்குள் சீனியர்-ஜூனியர் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது.

மற்றவர்களின் வெற்றியை ஒவ்வொருவரும் அனுபவித்து கொண்டாடுகிறோம். திட்டங்களை பகிர்ந்து கொள்கிறோம். அணியில் எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. அது எங்களது திறமையை மேம்படுத்துகிறது’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *