• January 18, 2020
0 Comments

பெல்ஜியத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் லாரன்ட் சைமன்ஸ். தனது 8 வயதிலேயே உயர்கல்வியை முடித்ததற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற லாரன்ட், தற்போது என்ஜினீயரிங் படிப்பையும் முடிக்கும் நிலையில் உள்ளார். ஆலந்து நாட்டின் ஐந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் அடுத்த மாதம் (டிசம்பர்) பட்டம் பெற இருக்கும் லாரன்ட், உலகிலேயே இளம் வயது பட்டதாரி என்ற சிறப்பை பெற உள்ளார். இவரது நுண்ணறிவு திறன் அளவு (ஐ.கியூ.) 145 அளவுக்கு இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.

ஐந்தோவன் பல்கலைக்கழகம் இதுவரை பார்த்த மாணவர்களிலேயே மிகவும் புத்திசாலியான நபர் லாரன்ட்தான் என பல்கலைக்கழக இயக்குனர் தெரிவித்து உள்ளார். அடுத்த மாதம் தனது என்ஜினீயரிங் பட்டப்படிப்பை முடிக்கும் லாரன்ட், உலகிலேயே இளம் பட்டதாரி என்ற பட்டத்தை மைக்கேல் கியார்னியிடம் இருந்து பெற உள்ளார். அமெரிக்காவின் அலபாமா பல்கலைக்கழகத்தில் இருந்து 10 வயதில் பட்டம் பெற்றவர்தான் இந்த மைக்கேல் கியார்னி என்பது குறிப்பிடத்தக்கது.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *