• November 17, 2019
0 Comments

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்-மஞ்சு வாரியர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த அசுரன் படம் ரூ.100 கோடிக்குமேல் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தெலுங்கு, இந்தி நடிகர்கள் பார்த்து பாராட்டினர்.

இந்த நிலையில் அசுரன் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்கி உள்ளன. இதில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகி தேர்வு நடந்தது. முன்னணி நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர். தற்போது ஸ்ரேயா தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *