• November 17, 2019
0 Comments

செயின்ட் லூசியா,

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து தொடங்கிய 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது சர்வதேச 20 ஓவர் போட்டி செயின்ட்லூசியாவில் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா அணியில், தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஷபாலி வர்மாவும், ஸ்மிர்தி மந்தனாவும் களமிறங்கியனர். இருவரும் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்து அசத்தினர். இவர்களின் அதிரடியில் இந்திய அணி வெகுவாக ரன்கள் சேர்த்தது.  அணியின் ஸ்கோர் 15.3 ஓவர்களில் 143 ரன்களைஎட்டிய போது இந்த ஜோடி பிரிந்தது.

இந்நிலையில் ஷபாலி-மந்தனா கூட்டணி தொடக்க விக்கெட்டுக்கு சேர்த்த 143 ரன்கள் சேர்த்தது  பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் விக்கெட் ஒன்றுக்கு அதிகபட்ச ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமையை பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *