• November 17, 2019
0 Comments

செயின்ட் லூசியா,

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து தொடங்கிய 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது சர்வதேச 20 ஓவர் போட்டி செயின்ட்லூசியாவில் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா அணியில், தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஷபாலி வர்மா அரைசதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் குறைந்த வயதில் அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை படைத்தார். அவருக்கு இப்போது வயது 15 ஆண்டு 285 நாட்கள்.

இதற்கு முன்பு சச்சின் தெண்டுல்கர் தான் இந்திய தரப்பில் குறைந்த வயதில் (16 ஆண்டு 214 நாட்களில்) சர்வதேச போட்டியில் அரைசதம் அடித்தவராக (1989-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 59 ரன்) வலம் வந்தார். அவரது 30 ஆண்டு கால சாதனையை ஹரியானாவைச் சேர்ந்த ஷபாலி முறியடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *