• November 17, 2019
0 Comments

அயோத்தி:

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து கோவில்களின் நகரமாக விளங்கி வரும் அயோத்திக்கு நேற்று நூற்றுக்கணக்கான மக்கள் சென்று அங்குள்ள கோவில்களில் வழிபாடு செய்தனர். இதைப்போல அங்கு ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்காக தூண்கள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் ராமஜென்மபூமி நியாஸ் பணிமனையையும் ஏராளமான மக்கள் பார்வையிட்டு சென்றனர். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு முழு விவரத்தை அறிந்து கொள்வதற்கான ஆர்வமும் அவர்களிடையே காணப்பட்டது. இதனால் செய்தித்தாள்களை விற்பனை செய்வோரிடம் அதிக கூட்டம் காணப்பட்டது.

இந்த தீர்ப்பு குறித்து பப்லூ கான் கூறுகையில், ‘குரானை நான் மிகுந்த பக்தியுடன் பின்பற்றி வருகிறேன். முஸ்லிம்களுக்கு மக்கா எவ்வளவு புனிதமானதோ, அதே அளவுக்கு இந்துக்களுக்கு ராமஜென்மபூமி புனிதமானது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்’ என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *