• November 17, 2019
0 Comments

தாம்பரத்திலிருந்து வந்த அரசு பேருந்து ஒன்று சாலையில் அதிக புகையை வெளியேற்றியபடி சென்றது. இதனால், நகரின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதோடு சில பயணிகளுக்கு மூச்சு திணறும் நிலை ஏற்பட்டது. கொசு மருந்து அடித்தால் வரும் புகையை விட,அரசு பேருந்து வெளியிட்ட அதிக புகையால் சாலையே தெரியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். அதிர்ஷ்டவசமாக பெரிய அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தால் வாகன ஓட்டுநர்கள் வியாபாரிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். பொதுமக்கள் கூறுகையில் காஞ்சிபுரத்தில் இயக்கப்படும், பழயை பேருந்துகளால் இது போன்ற பிரச்னைகள் அடிக்கடி ஏற்படுவதாகவும் எனவே, பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *