• November 17, 2019
0 Comments

பெங்களூரு:

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது அந்த கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தார்கள். இதையடுத்து அந்த ஆட்சி கவிழ்ந்து, முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்றது.

ராஜினாமா செய்தவர்கள் உள்பட 17 எம்.எல்.ஏ.க்கள் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, அப்போதைய சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அந்த 17 எம்.எல்.ஏ.க்களும் 2023-ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கர்நாடகத்தில் 17 தொகுதிகள் காலியாக இருப்பதாகவும், அதில் 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. 15 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *