• November 17, 2019
0 Comments

புதுடெல்லி:

இன்று அயோத்தி தீர்ப்பு வெளியானதையடுத்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியாதாவது, நாடே எதிர்பார்த்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. என் மனதில் இருப்பதை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்.

உலகிலேயே இந்தியா மட்டும் தான் பெரும் ஜனநாயக நாடாக செயல்பட்டு வருகிறது. மக்களாட்சி வலிமையாக தொடருகிறது என்பதை இந்தியா காட்டியுள்ளது. அயோத்தி வழக்கு தினமும் விசாரிக்கப்பட வேண்டும் என நாடு விரும்பியது நிகழ்ந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வேற்றுமையும், எதிர்மறை எண்ணங்களும் மறைந்த தினம் இன்று. உச்சநீதிமன்றம் இந்தியாவின் வலிமையான அமைப்பு என்பது நிரூபணமாகி உள்ளது. மிக நீண்ட சட்டமுறை முடிவுக்கு வந்துள்ளது. இந்த தீர்ப்பு மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *