• November 20, 2019
0 Comments

திருவனந்தபுரம்:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் சிலை வைக்கலாம் என்பதை உறுதி செய்துள்ள நீதிமன்றம் பாபர் மசூதியை இடித்தது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு மூலம் அயோத்தி நிலம் தொடர்பான சட்டபூர்வமான விஷயங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும், மதிப்பளிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *