• November 20, 2019
0 Comments

அமிர்தசரஸ்:

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக், தனது வாழ்வின் கடைசி 18 ஆண்டுகளை பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அங்கு அவரது நினைவாக கர்தார்பூர் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக சீக்கிய பக்தர்கள், சென்று வருவதற்கு வசதியாக இரு நாடுகளுக்கு இடையே, 3 கி.மீ., துாரத்துக்கு சாலை அமைக்கும் திட்டத்தை, இரு நாடுகளும் செயல்படுத்தி உள்ளன. பஞ்சாப் மாநிலத்தின் கர்தார்பூரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவிலிருந்து, பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவுக்கு இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சாலையை யாத்ரீகர்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அப்போது மன்மோகன் சிங்கை பிரதமர் மோடி சந்தித்தார். இருவரும் ஒருவொருக்கொருவர் ஆரத்தழுவி நலம் விசாரித்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *