• November 20, 2019
0 Comments

கர்தார்பூர் பாதை வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் சீக்கிய யாத்ரீகர்களுக்கான பாதை திறப்பு விழாவில் கலந்து கொண்ட மோடி, ” இந்த பாதையை திறந்து வைத்து, நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதை எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். ஆன்மிக சேவை செய்யும் சீக்கிய மக்களுக்கு ஏற்படும் அதே உணர்வினை இந்த புனிதமான மண்ணில் நிற்கும் வேளையில் நான் உணர்கிறேன். குருநானக் தேவ் சீக்கியர்களுக்கு மட்டுமான சொத்து அல்ல. ஒட்டுமொத்த மனிதகுலத்துக்குமான ஊக்கசக்தியாக அவர் விளங்கினார். குருநானக் தேவ் ஒரு குருவாக மட்டுமல்லாமல் நமது சிந்தனையாகவும் வாழ்க்கையின் அடித்தளமாகவும் திகழ்ந்தார்.இந்த பாதையை அமைப்பதற்கு உழைத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கர்தார்பூர் பாதை விவகாரத்தில் இந்தியாவின் உணர்வுகளை அவர் புரிந்து கொண்டார். அதற்கு மதிப்பளித்து, உரிய வகையில் செயலாற்றினார் ” என்று தெரிவித்துள்ளார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *