• November 17, 2019
0 Comments

பண்ருட்டியில் இருந்து 7 பேர் ஒரு காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் பண்ண நேற்றிரவு புறப்பட்டு வந்தனர். அப்போது அந்த காரை பண்ருட்டியை சேர்ந்த பிராங்கிளின் (வயது33) என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் அவர்களது கார் இன்று காலை 7.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழஈரால் விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் முன்னால் தூத்துக்குடி நோக்கி ஒரு லாரி சென்றது. திடீரென அந்த லாரியின் பின்பகுதியில் கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் லாரியின் பின் பகுதியில் கார் சிக்கி கொண்டது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த பிராங்கிளின், பண்ருட்டியை சேர்ந்த விஜி என்ற நந்தகுமார் ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து போனார்கள் . மேலும் காரில் இருந்த வைத்திய நாதன் (48), பாலு (36), சவுந்தரி (28), ராஜி (36), செந்தில்குமார் (35), ரமேஷ்(31) ஆகிய ஆறு பேரும் படுகாயம் அடைந்தனர். லாரியின் பின்பகுதியில் கார் சிக்கி கொண்டதால் காரின் உள்ளே இருந்தவர்கள் யாரும் வெளியே வரமுடிய வில்லை. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதனையடுத்து மேலும் கோவில்பட்டி தீயணைப்பு வீரர்களும் வந்தார்கள். போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காரின் கதவுகளை உடைத்து அதில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் சுமார் 1மணி நேர போராட்டத்திற்கு பின் காரில் இருந்து எடுக்கப்பட்டது .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *