• November 17, 2019
0 Comments

முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில், பால், வெண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். மற்றொரு கிண்ணத்தில் மைதா, கோகோ பவுடர், பொடித்த சர்க்கரை, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பிறகு, முட்டை கலவையுடன் மைதா மாவு கலவையை சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலந்து, இறுதியாக சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலந்து இட்லி மாவு பதத்திற்கு தயார் செய்துக் கொள்ள வேண்டும். பின்னர், பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து நெய்விட்டு சூடாக்கி, அதில் மாவை ஊற்றி இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்க வேண்டும். இப்போது சுவையான சாக்லேட் பணியாரம் தயார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *