• November 17, 2019
0 Comments

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு. குலசேகரத்தை அடுத்த தாழமூட்டுவிளை, அயக்கோடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 42). இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இந்நிலையில் மகேசுக்கும் கேரள மாநிலம் எரிமேலி பகுதியை சேர்ந்த சோபனா (40) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது . திருமணம் முடிந்த பின்பு சோபனா, அயக்கோட்டில் உள்ள கணவர் வீட்டில் தங்கி இருந்தார். தொடக்கத்தில் இனிமையாக சென்ற இவர்களின் இல்லற வாழ்க்கையில் சமீபத்தில் பிரச்சினை உருவானது .
அதனையடுத்து கணவன்- மனைவி இருவருக்கும் இடையே கடந்த சில வாரங்களாக குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சோபனா மனம் உடைந்து காணப்பட்டார். மகேஷ் நேற்றிரவு மார்த்தாண்டம் பகுதிக்கு சவாரிக்கு போயிருந்தார் . பின்னர் அங்கிருந்து இரவு 12 மணி அளவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் சமையல் அறையில் சோபான தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் . இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ் இது குறித்து குலசேகரம் போலீசில் புகார் செய்தார். அதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து திருமணம் ஆன 10 மாதத்தில் சோபனா தற்கொலை செய்ததால் இது பற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் ஆணையிடப்பட்டுள்ளது .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *