• November 17, 2019
0 Comments

காரைக்காலில் இருந்து நாகை, திருவாரூர் உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கு மதுபானங்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய புகார்கள் கிடைத்திருந்தன . இந்நிலையில் தமிழக எல்லையான நாகை அடுத்த நாகூர் சோதனை சாவடியில் நாகூர் காவல் நிலைய போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்தவேளையில் அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு காரை போலீசார் வழிமறித்தனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக ஓடியுள்ளது .இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை விரட்டி சென்று கிழக்கு கடற்கரை சாலை பிரிவில் உள்ள மேல நாகூர் அருகே மடக்கி பிடித்தனர். இதையடுத்து காரை சோதனை செய்ததில் 1920 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது . இது குறித்து நடத்திய விசாரணையில் காரில் மதுபாட்டில் கடத்தி வந்தவர் மேலவாஞ்சூர் ஆசாரி தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சிலம்பரசன் (வயது 30) என்பதும் , அவர் திருத்துறைப்பூண்டிக்கு மது பாட்டில்கள் கடத்தி செல்வதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள் .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *