• November 20, 2019
0 Comments

இந்த ஆண்டு தொடக்கத்தில் கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட’ படத்தின் அமோக வெற்றிக்கு பிறகு நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கால்ஷீட் டைரியில் ‘தர்பார்’ மற்றும் இயக்குநர் சிவா படம் என இரண்டு படங்கள் இடம்பெற்றுள்ளன . அதிலும் குறிப்பாக ‘தர்பார்’ படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். ரஜினிகாந்தின் 167-வது படமான இதில் அவர் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா டூயட் பாடி ஆடி வருகிறார். தொடர்ந்து , சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ், சமதா அஞ்சன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இதற்கு இசையமைப்பாளராக அனிருத்தும், ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவனும் இணைந்து கொண்டுள்ளனர் . இந்நிலையில் சமீபத்தில், வெளியான மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே செம்ம வரவேற்பை பெற்றிருந்தது . அடுத்து இந்த படத்தை 2020 பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யவுள்ளனர் .இப்படியிருக்க இந்த படத்தின் ஆடியோவை இந்த மாத இறுதியிலும், டீசரை டிசம்பர் 12-ஆம் தேதி ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டும், ட்ரெய்லரை ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு தினத்திலும் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக மெசேஜ் வெளியாகியுள்ளது .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *