• November 20, 2019
0 Comments

பெங்களூரு:

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு நடைபெற்று வந்தது. அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்தது. இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்தது.

சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய கோரி தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 17 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, கடந்த மாதம் இறுதியில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வாரம் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு வெளியாகவில்லை.

அதைத்தொடர்ந்து முகுல் ரோட்டகி மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது வருகிற 13-ந் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் கூறினர். நீதிபதிகள் அன்றைய தினமே முடிவை அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? அல்லது தீர்ப்பு அறிவிக்கப்படுமா? என்பது அன்று தெரியவரும். இடைத்தேர்தலை ஒத்திவைக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டதால், தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *