• November 17, 2019
0 Comments

காரைக்குடி அருகே ஆலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அருமைநாயகம் என்ற காசி (81). இவரது மனைவி சரோஜா (79). இருவரும் 60 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். எப்போதும் இணை பிரியாமல் வாழ்ந்து வந்தனர். அவர்களது 2 மகன்கள், 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டன. நேற்று சரோஜா திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்து மரணம் அடைந்தார். இதைக் கேள்விப்பட்ட 5 நிமிடத்தில் அருமை நாயகமும் இறந்தார். இறப்பிலும் இணை பிரியாத காதல் தம்பதிக்கு அக்கிராமமே அஞ்சலி செலுத்தியது. இது குறித்து உறவினர்கள் கூறியதாவது: அருமைநாயகமும், அவரது மனைவியும் காதல் தம்பதிக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தனர். அவர்களுக்குள் சண்டை வந்ததை நாங்கள் பார்த்ததே இல்லை. அவர்கள் இறப்பு எங்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *