• November 17, 2019
0 Comments

நாகை மாவட்டம் முழுவதும், பரவலாக வைரஸ் காய்ச்சல் பரவி உள்ள நிலையில், வேளாங்கண்ணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு,ஏராளமானவர்கள், பல நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்கு வந்துள்ளனர்.நோயாளிகள் மேற்கொண்ட சிகிச்சை குறித்து, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அருண்பதி விசாரித்துள்ளார்.நோயாளிகள், தனியார் கிளினிக்கில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாக கூறியதையடுத்து, சந்தேகமடைந்த அவர், மருத்துவ இணை இயக்குனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். இணை இயக்குனர் மகேந்திரன் தலைமையிலான டாக்டர்கள், வேளாங்கண்ணியில் செயல்படும் ஆரோக்கிய அன்னை கிளினிக்கில், திடீர் சோதனை மேற்கொண்டனர்.இதில், சென்னையைச் சேர்ந்த அலோபதி டாக்டர் அந்தோணி என்பவர், மூன்று ஆண்டுகளுக்கு முன், நோயாளிகளை பரிசோதனை செய்வதற்கு மட்டும் அனுமதி பெற்றுள்ளதும், தற்போது, பி.எஸ்.எம்.எஸ்., படித்துள்ள சித்தா டாக்டர் கீர்த்தனா என்பவரை வைத்து, ஆறு படுக்கை வசதியுடன் அலோபதி சிகிச்சை அளித்ததுடன், பார்மசியும் வைத்திருந்தது தெரிந்தது. அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை வெளியேற்றிய மருத்துவ அதிகாரிகள், கிளினிக் மற்றும் பார்மசியை பூட்டி,’சீல்’ வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *