• November 17, 2019
0 Comments

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தமனூரை சேர்ந்தவர் சக்திவேல்(44). மது பழக்கத்திற்கு அடிமையான இவர், அதே பகுதியை சேர்ந்த உறவினர்களான ராஜேந்திரன்(45), மீனா(30), ஆகியோரிடம் கடன் வாங்கி வந்தார். வாங்கிய கடனை அவர் திருப்பி கொடுக்கவில்லை. மேலும், அடிக்கடி கடன் கேட்டு இருவரையும் சக்திவேல் தொந்தரவு செய்து வந்தார். அவர்கள் கடன் கொடுக்க மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், 2015 ஜன., 3ல் இருவரையும் உருட்டு கட்டையால் அடித்துக் கொலை செய்தார். திருப்பத்தூர் தாலுகா போலீசார், சக்திவேலை கைது செய்தனர். இந்த வழக்கு  வேலூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி செல்வம் விசாரித்து சக்திவேலுக்கு ஆயுள் தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *