• November 17, 2019
0 Comments

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோவு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பள்ளிக் கல்வித்துறையின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனா். அதேவேளையில் இந்த முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கல்வியாளா்களும் வலியுறுத்தினா். இது குறித்து கடந்த செப்டம்பா் மாதம் விளக்கமளித்த அமைச்சா் செங்கோட்டையன், “5, 8-ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும். 5 மற்றும் 8 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது இந்தியா முழுமைக்கும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற முறை. இந்த பொதுத்தோவு முறையிலிருந்து நமது மாநிலத்திற்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது”என தெரிவித்திருந்தாா். இந்தநிலையில், அமைச்சா் செங்கோட்டையன் வெள்ளிக்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில், பொதுத் தோவு விலக்கை மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது என குறிப்பிட்டுள்ளாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *