• November 20, 2019
0 Comments

கடந்த சில நாட்களாக கோவை, திருப்பூர் பகுதியில் பெய்த மழையால் நொய்யல் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் காங்கயம் பகுதியில் நொய்யலில் மழை வெள்ளம் அதிகளவில் வந்தது. நத்தக்காடையூர் – மருதுார் இடையேயுள்ள நொய்யல் ஆற்று தரைப்பாலம் இந்த வெள்ளத்தால் மூழ்கியது. பாலத்துக்கு மேல் இரண்டடி உயரத்துக்கு வெள்ளம் சென்றது. இதனால், நேற்று முன்தினம் இரவு அப்பாலம் மீது போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  அதிகாலை ஒரு அடி உயரம் வரை சென்ற வெள்ளம், படிப்படியாக குறைந்து பாலத் துக்கு கீழ் சென்றது. இதையடுத்து நேற்று காலை 9:00 மணியளவில் பாலம் மீது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *