• November 20, 2019
0 Comments

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கிராமத்தில் ஆதிதிராவிட நல துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, ராதாநல்லூர் கேசிகன் பாலம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார்(28) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், 4ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்து பிரேம்குமாரை நேற்று தாக்கினர். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்படி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் ‘போக்சோ’ சட்டத்தில் பிரேம்குமாரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *