• November 20, 2019
0 Comments

பெரம்பலூர் பிரம்மதேசம் கிராமத்தில் 1,000த்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 15 நாட்களாக இக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. காய்ச்சலால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கிராமத்தில் உள்ள அனைவருக்கும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சலுடன், இருமல், சளி, கை, கால் மூட்டுகளில் வலி, உடல் சோர்வு, பசியின்மை உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவக் குழுவினர், இக்கிராமத்தில் முகாமிட்டு சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு  டெங்கு மற்றும் மலேரியா போன்ற சோதனைகளை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *