• November 17, 2019
0 Comments

தண்ணீர் ஊற்றுவதைத் தவிர்த்து இந்தச் செடியை வளர்ப்பதற்கென்று தனியாக எந்த முயற்சியும் எடுக்கத் தேவையில்லை. ஒருமுறை நட்டு வைத்தால் அதன் பழங்கள் பழுத்துக் கீழே விழுவதினால் எண்ணற்ற செடிகள் வளர்ந்து விடுகின்றன. கறிவேப்பிலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஏராளமாகப் பயிர் செய்யப்ப்படுகிறது. அதுவும் குறிப்பாகத் தமிழ்நாட்டின் அனைத்து தோட்டங்களிலும் கறிவேப்பிலை மரம் நீங்காத இடத்தினைப் பெற்று இருக்கிறது. நம் நாட்டின் அனைத்து இடங்களிலும் கறிவேப்பிலை சாதாரணமாகக் கிடைக்கின்றது.

வீடுகளிலும், வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்படும் கறிவேப்பிலை மரங்களின் நுனிக் கிளைகளைப் பறித்துப் பயன்படுத்துவதால் பெரும்பாலும் புதர்செடியாகவே காணப்படுகின்றன. கறிவேப்பிலையில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று நாட்டுக் கறிவேப்பிலை மற்றொன்று காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *