• November 17, 2019
0 Comments

முந்திரி பருப்பிற்கு எடை கூடவும், குறைக்கவும் செய்யும் சக்தி உண்டு. மேலும் தினமும் சிறிது முந்திரியை உட்கொண்டு வந்தவர்களை, முந்திரி சாப்பிடாமல் இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில் உடல் எடை அதிகரிப்பது குறைந்திருப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நமது உடலில் மக்னீசியம், கால்சியம் போன்ற தாதுக்கள் மிகவும் அவசியம்.

முந்திரி பருப்பில் இவை இரண்டும் அதிகம் உள்ளன. மக்னீசியம் எலும்புகளின் மேற்பரப்பில் இருப்பதால், அவை கால்சியம் நரம்பு செல்களுக்குள் நுழைவதைத் தடுப்பதுடன், இரத்த நாளங்களையும், தசைகளையும் ரிலாக்ஸ் அடையச் செய்கிறது.

எனவே அடிக்கடி முந்திரி சாப்பிடுவது நரம்புகளுக்கு மிகவும் நல்லது. சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால் விளைவுகள் மிக கடுமையாக இருக்கும் நிலை ஏற்படுகிறது. தினமும் முந்திரி பருப்பை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களில் சிறுநீரக கற்கள் உருவாவதைத் சுலபத்தில் தடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *