• November 17, 2019
0 Comments

மும்பை:

மராட்டிய சட்டசபை தேர்தலில், பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை பெற்றது. இதனால் இந்த கூட்டணி பிரச்சினை இன்றி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு கட்சிகளின் தொடர் பிடிவாதம் காரணமாக, தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 வாரங்கள் கடந்த போதிலும், மராட்டியத்தில் இன்னும் புதிய அரசு அமையவில்லை.

புதிய அரசு அமைவதில் முடிவு எட்டப்படாத நிலையில் இன்றுடன் பதவிக் காலம் முடிவதால் முதல்-மந்திரி பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் விலகினார். ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அவர் அளித்தார். இந்த நிலையில் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதல்-மந்திரி ஆக்க அமித் ஷா உதவி தேவையில்லை என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *