• November 20, 2019
0 Comments

தருமபுரி

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் கிராமத்தில் நள்ளிரவு நேரத்தில் அடுத்தடுத்து 5 வீடுகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடியுள்ளனர். அப்போது ஒரு வீட்டினுள் தூங்கி கொண்டிருந்த மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன் நகையை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த கடத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து தொடர்ந்து 5 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *