• November 20, 2019
0 Comments

சிவகிரி

சிவகிரி அருகே உள்ள சிவலிங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(25). இவர் தனது நண்பரான அதே பகுதியை சோந்த தங்கமணி (25) என்பவருடன் கடந்த 20-ந்தேதி இரவு சிவகிரி மேலரதவீதியில் உள்ள முனியாண்டி என்பவரின் தேங்காய் கடையில் பூட்டை உடைத்து அங்கு இருந்த பணம், தேங்காய் மற்றும் சில பொருட்களை திருடிவிட்டு அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த  போலீசார் அவர்களை அழைத்து விசாரித்தார். இந்த விசாரணையில் இருவரும் முன்னுக்குப்பின் முரனாக பதில் கூறியதால் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.  அங்கு வைத்து விசாரித்ததில் இருவரும் தேங்காய் கடையில் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன் மற்றும் தங்கமணியை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் சங்கரன்கோவில் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *