• November 20, 2019
0 Comments

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், பி.எம்.சி. வங்கி பிரச்சினை தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பி.எம்.சி. வங்கியில் ரூ.1 லட்சம் வரை டெபாசிட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது. அவர்களது பணத்துக்கு காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. அதிகளவில் பணம் டெபாசிட் செய்து உள்ள வீட்டுவசதி சங்கங்கள், மத நிறுவனங்களுக்கு தான் பிரச்சினை. அவர்களது பணத்தை திருப்பி வழங்க சட்டசபை தேர்தலுக்கு பிறகு மாநில அரசு நடவடிக்கை எடுக்கும். பி.எம்.சி. வங்கி, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் அந்த வங்கியை பொதுத்துறை வங்கியுடன் இணைப்பது குறித்து மாநில அரசு ஆராயும். பி.எம்.சி. வங்கி பிரச்சினை குறித்து ஏற்கனவே பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் பேசி இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *