• November 20, 2019
0 Comments

திருச்சி

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளை சம்பவம் தொடர்பாக தினந்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையே இந்த கொள்ளையில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன், சுரேஷ், மதுரை சோழவந்தான் அருகே உள்ள குருவித் துறையை சேர்ந்த கணேசன் ஆகியோர் கடந்த ஜனவரி மாதம்  திருச்சி நெ.1 டோல்கேட் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் சுவரில் துளையிட்டு 470 பவுன் நகைகள் மற்றும் ரூ.19 லட்சம் பணத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

இந்த கொள்ளை தொடாபர்க கைது செய்யப்பட்டுள்ள கணேசனிடம் அதிரடி விசாரணை நடத்திய நிலையில், பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் கொள்ளையில் ஈடுபட்டது எப்படி? கொள்ளையடிக்கப்பட்ட நகை-பணத்தை என்ன செய்தார்கள்? என்று நடத்தப்பட்ட விசாரணையில், பஞ்சாப் நே‌ஷனல் வங்கி கொள்ளைக்கு சொகுசு வேன் ஒன்றை பயன்படுத்தியுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் திருச்சி திருவெறும்பூர் அருகே சோழமாதேவியில் நிறுத்தி வைத்திருந்த வேனை பறிமுதல் செய்தனர்.

மேலும் கொள்ளையடித்த நகைகளை மூட்டையாக கட்டி வேனில் போட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். கொள்ளையடித்ததும் வேனில் செல்லும் போது, நகைகளை அதற்கான எந்திரத்தில் போட்டு அளந்து 4 பேரும் பங்கு பிரித்துள்ளனர். பொதுமக்களுக்கு சுற்றுலா வந்தது போல் தெரியவே, அவர்கள் கொள்ளையடிக்க சொகுசு வேனை பயன்படுத்தியுள்ளனர். டிரைவிங்கில் கைதேர்ந்த கணேசன், கொள்ளையடித்ததும் போலீசார் கண்ணில் சிக்காமல் இருக்க வேனை அவனே ஓட்டிச் சென்றுள்ளான்.

அந்த வேன் கணேசனுக்கு சொந்தமானதா? அல்லது வேறு யாருடையது? என்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *