• November 20, 2019
0 Comments

குன்னூர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் 15-க்கும் மேற்பட்ட மாடு, கோழி, ஆடு விற்பனை செய்யும் இறைச்சி கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு ஏராளமான மக்கள் வந்து இறைச்சி வாங்கி செல்லும் நிலையில், இந்த கடைகளுக்கு குன்னூர் டி.டி.கே.சாலை பகுதியில் செயல்பட்டு வரும் இறைச்சி அறுக்கும் கூடத்தில் இருந்து இறைச்சிகள் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இறைச்சி அறுக்கும் கூடத்தில் இருந்து இறைச்சிகளை விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக ஒரு ஆட்டோவில் பணியாளர்கள் ஏற்றி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய்கள் ஆட்கள் உள்ளே சென்றதும் ஆட்டோவில் ஏறி அங்கு வைக்கப்பட்டிருந்த இறைச்சிகளை தின்று கொண்டிருந்தது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் மார்க்கெட்டில் உள்ள இறைச்சி கடைகளில் தொங்கவிடப்பட்டிருந்த கறிகளை எலிகள் கடித்து தின்னும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்து 700 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர். மேலும் சுகாதாரமற்ற முறையில் கடையை வைத்திருந்த கடைக்கு சீல் வைத்து சென்றனர். தற்போது இறைச்சி அறுக்கும் கூடத்தில் இருந்து ஆட்டோவில் ஏற்றப்படும் கறிகளை நாய்கள் சாப்பிடும் காட்சி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *