• November 20, 2019
0 Comments

திருவள்ளூர்

திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்து வருபவர் ஜெயபாஸ்கரன், இவரது அலுவலகத்தில், கணினி ஆப்ரேட்டராக தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியரான திருத்தணியை சேர்ந்த ராஜா (என்கிற) ராபர்ட் என்பவர், மோட்டார் வாகன ஆய்வாளரின் ஐடி, பாஸ்வேர்ட் ஆகியவற்றை தெரிந்துகொண்டு, வெளிமாவட்டத்தை சேர்ந்த, தகுதியற்றவர்களுக்கு, ஓட்டுநர் உரிமம் வழங்கி உள்ளார்.

மேலும் போலியான முகவரியை வைத்து ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தும், போலி ஆவணங்களை தயாரித்தும் கொடுத்துள்ளார். தனது நண்பர்களான திருவண்ணாமலை மாவட்டம் தாளவேடு விஷ்ணு, மெய்யூர் சக்திவேல் ஆகியோரின் உதவியுடன் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரை வட்டார போக்குவரத்து அலுவலர் விசாரணைக்கு அழைத்தபோது தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனிடம் புகார் செய்தார்.

இது குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணப்பனுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர்பூக்கும் ஆனந்தன் தலைமையில் போலீசார் தலைமறைவாக இருந்த ராஜா, விஷ்ணு, சக்திவேல் ஆகிய மூவரையும் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *