• November 20, 2019
0 Comments

சென்னை

கடந்த ஆகஸ்டு மாதம் மருத்துவ படிப்புக்கான எம்.பி.பி.எஸ். தேர்வில், சென்னையை அடுத்துள்ள 2 தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரி மாணவர்கள் 41 பேர் காப்பி அடித்து எழுதி உள்ளனர்.
என்பது தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் கண்டு பிடித்ததுள்ளது.

இந்நிலையில் அந்த மாணவாகள் படிக்கும் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 3 ஆண்டுகளுக்கு தேர்வு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 41 மாணவர்கள் எழுதிய தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காபி அடித்து பிடிபட்ட அந்த மாணவர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள.

ஒரு தனியார் மருத்துவ கல்லூரிக்கு 2 ஆண்டுகள் தேர்வு நடத்த தடை விதிக்கப் பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு 2 மருத்துவ கல்லூரிகளிலும் உள்ள தேர்வு மையத்தையும் அங்கு இருந்த சி.சி.டி.வி. கேமராவையும் ஆய்வு செய்து இந்த நடவடிக்கைக்கு பரிந்துரைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *