• November 12, 2019
0 Comments

புதுச்சேரி

புதுச்சேரி தொகுதியில் காலியாக உள்ள காமராஜர் தொகுதியில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பிரச்சாரத்தில் போது அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் கூறுகையில், புதுவை காங்கிரஸ் ஆட்சியின் ஊழல், முறைகேடுகளுக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்துள்ளார். அதோடு கவர்னர் மீது தவறான குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதை புதுவை கவர்னர் கிரண்பேடி கண்டித்துள்ளார். ஏனாமில் என்ன நடக்கிறது? என தெரியாமல் ஸ்டாலின் பேசியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலின்போது இலவச அரிசி கொள்முதல் செய்து மாநில எல்லைக்கு வந்துவிட்டது. கோரிமேடு எல்லையில் லாரியில் அரிசி நிற்பதாக பிரச்சாரம் செய்தனர். எங்கள் வேட்பாளர் புவனேஸ்வரன் வெற்றி பெற்றால் தடைபட்டுள்ள அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம். இலவச செட்டாப் பாக்ஸ் வழங்குவோம். இதை எப்படி நான் கூற முடியும் என கேட்கலாம். புவனேஸ்வரன் வெற்றி பெற்றால் 2 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். ரங்கசாமி முதலமைச்சர் ஆவார். அப்போது அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *