• November 20, 2019
0 Comments

புதுச்சேரி,

புதுவை காமராஜ்நகர் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனா என்ற புவனேஸ்வரனை ஆதரித்து இன்று கட்சியின் தலைவர் ரங்கசாமி தீவிர பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தின் போது கிருஷ்ணாநகர், வசந்த நகரில் விடுபட்ட பகுதிகளில் வீதி வீதியாக வீடு வீடாக சென்று ரங்கசாமி வாக்கு சேகரித்தார்.

மேலும் இந்த பிரச்சாரத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த ரங்கசாமி கூநுகையில்,

காமராஜ்நகர் தொகுதியில் உள்ள அனைத்து பகுதியிலும் சென்று வாக்கு சேகரித்துள்ளோம். செல்லும் இடமெல்லாம் மக்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். எனவே எங்கள் வேட்பாளரின் வெற்றி நிச்சயம். கூட்டணி கட்சியினரும் முழுமையாக எங்கள் வேட்பாளர் புவனேஸ்வரனுக்கு வாக்கு சேகரித்தனர் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *