• November 20, 2019
0 Comments

கோவை

கோவை புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் விசாலினி. இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், தனது 10 வயது மகள் தீபிகாவுடன் வசித்து வந்தார். தீபிகா தனது பாட்டி வீட்டில் தங்கி, மருதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தீபிகாவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை உறவினர்கள் கடந்த 16-ந் தேதி தீபிகா மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர்கள் தீபிகாவை தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் நேற்று சிகிச்சை பலனின்றி தீபிகா பரிதாபமாக இறந்தார்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது வரை டெங்கு காய்ச்சலுக்கு 30 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 140 பேரும் என மொத்தம் 170 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை தனி வார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *