• November 20, 2019
0 Comments

பேராவூரணி

சீர்காழி அடுத்த நல்லூர் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் முருகவேல் (31). இவர் லாரி வாங்கி புக்கிங் ஆபீஸ் மூலம் பேராவூரணியிலிருந்து சென்னைக்கு சரக்குகள் ஏற்றி கொண்டு போய் இறக்கி விட்டு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் அவர் தனது நண்பர்களான ராமநாதபுரம் கருப்பசாமி மற்றும் திருவாரூர் விஜயகுமார் ஆகியோருடன் பேராவூரணி அருகே கொன்றைக்காடு மெயின் ரோட்டில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றார்.

அப்போது லாரியை நிறுத்தி விட்டு 3 பேரும் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முருகவேல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கி விட்டார். இதுகுறித்து தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த சப்-தீயணைப்பு வீராகள் முருகவேல் உடலை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாசில்தார் ஜெயலெட்சுமி, வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *