• November 20, 2019
0 Comments

தேங்காய்த் துருவலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். காய்ந்த மிளகாய், முழுமல்லி , சீரகம், கசகசா, மிளகு, சோம்பு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் குக்கரை வைத்து மட்டன் துண்டுகளைச் சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து மட்டனை நன்கு வேக விட்டு இறக்க வேண்டும். பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பின் அதில் நறுக்கிய முருங்கைக்காயைச் சேர்த்து நன்கு வதக்கி, அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். மசாலா பச்சை வாசனை போனவுடன் வேக வைத்த மட்டன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி, தேங்காய் விழுதைச் சேர்த்துக் கலந்து, மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் போது நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவி இறக்க வேண்டும். இப்போது சுவையான முருங்கைக்காய் மட்டன் மசாலா தயார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *